தோட்டம் தேடிச்சென்ற தண்ணீர் சூழல் பொங்கலிட்டு குதூகலம்

......................................................

Posted on :13 January ,2020 19:11:30
News Image

தோட்டம் தேடிச்சென்ற தண்ணீர் சூழல் பொங்கலிட்டு குதூகலம் 

திருச்சி, தண்ணீர் அமைப்பினர் இயற்கை, சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் பாதுகாப்பு, மழை நீர் சேமிப்பு, விவசாயம், மரபும் வாழ்வியல் குறித்து பல்வேறு நிகழ்வுகள் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இவ்வாண்டு பொங்கல் பண்டிகைக்கு குண்டூர் பால்ராஜ் தோட்டத்தில் தண்ணீர் அமைப்பு சார்பில் 6 ம் ஆண்டு  சூழல் பொங்கல் விழா  குதூகலமாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தண்ணீர் அமைப்பின் தலைவர் பொன்னிளங்கோ, செயலாளர்  நீலமேகம், இணைச் செயலாளர் சதீஷ்குமார், தனலட்சுமி பாஸ்கரன், லெனின்,  ஆலோசனைக் குழு உறுப்பினர் ராஜா ஆகியோர் பாரம்பரிய உடையில் வந்து விருந்தினர்களை வரவேற்றனர்.

விழாவில் மாவட்ட நூலக அலுவலர் சிவகுமார், மாவட்ட அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஏகநாதன், பனானா லீஃப் உரிமையாளர் மனோகரன், வாசகர் வட்டத் தலைவர் கோவிந்தசாமி,  மணிகண்டம் வட்டாரக் கல்வி அலுவலர் மருதநாயகம், குண்டூர் மக்கள் நலச்சங்க உறுப்பினர்கள் அசோக், நன்மாறன், கலைமணி, துரை வெங்கடேசன், பேராசிரியர் நெடுஞ்செழியன், லலிதா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாலன், பாலமுருகன், அமுதா,  அன்பாலயம் செந்தில்,   மக்கள் சக்தி இயக்க மாவட்டச் செயலாளர் இளங்கோ, அசோகன்,  பவுல் குணா, செந்தண்ணீர்புரம்  அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள்  ஆகியோர் விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தனர். 

சூழலியல் பொங்கல் விழாவில், இயற்கை விவசாயத்தில் விளைந்த பாரம்பரிய நெல் வகைகளை கொண்டு புது அரிசி, புதுப்பானை கொண்டு பொங்கல் செய்யப்பட்டது. நாட்டு விதைகள், நாட்டு காய்கறி விதைகள், நாட்டு மர விதைகள், நெல் ரகங்கள் கொண்ட  கடை அமைக்கப்பட்டு  அனைவருக்கும் விதைகள் வழங்கப்பட்டது.          இளைஞர்கள் மரபு விளையாட்டுக்களையும் உணவுகளையும் கண்டறிந்து கற்றுக்கொண்டு அதனை தொடர்ந்து வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும் என்று  வலியுறுத்தப்பட்டது. ஆடல், பாடல் கலை நிகழ்வுடன் வயல்வெளியில் இயற்கையை,  விவசாயத்தை, கால்நடை உள்ளிட்ட பல்லுயிரை போற்றும் விதமாக சூழல் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விழாவை சிறப்பிக்க தமிழர்களின் மரபு சார் பறை இசை, நாட்டுப்புறப் பாடல், நாட்டுப்புற நடனம், சிலம்பாட்டம், கராத்தே, மரபு சார் விளையாட்டுகள் உள்ளிட்டவை நடைபெற்றன. 

இவ்விழாவில் தமிழர்களின் மரபு சார்ந்த  பாரம்பரிய விளையாட்டுக்கள் சிலம்பாட்டம், வாள் சண்டை, சுருள்வாள், கத்தி , உரியடித்தல், கயிறு இழுத்தல் போட்டிகள் நடைபெற்றது. நாட்டுப்புறக் கலைகளான கரகாட்டம், கோலாட்டம், பறையாட்டம், கும்மி ஆட்டம், ஆகியவை இடம் பெற்றன.

இதில் பிராட்டியூர் அரசுப் பள்ளி மாணவர்களின் பறை இசை, கரகாட்டம் மற்றும் தமிழி கலைக்களம் குழுவினரின் பறை முழக்கம், செல்வி. சுபிக்ஷா பரதம், நாட்டுப்புற நடனம், தமிழன் சிலம்பம் பாசறை குழுவினரின் சிலம்பாட்டம், ஜீவா, ஸ்ரீ குழுவின் சிலம்பாட்டம், இடமலைப்பட்டி புதூர் தொடக்கப் பள்ளி மாணவிகளின் கராத்தே, செல்வன் ஆகாஷ், மதன்குமார் நாட்டுப்புறப் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் அனைவரையும் பரவசப்படுத்தியது.

கலைஞர்களுக்கு பரிசும், விருந்தினர்களுக்கு வருங்கால தலைமுறை வளமாக தேவையான சூழலியலும் கிடைக்கப்பெற்று மகிழ்ந்தனர். 

சூழல் பொங்கல் விழா கலைநிகழ்ச்சி வீடியோ காண கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும். https://youtu.be/h-PQeIxdtZM

சூழல் பொங்கல் விழா அழைப்பிதழ் வீடியோ காண லிங்கை பயன்படுத்தவும். https://youtu.be/VEX4d2WZOAc

 தண்ணீர் அமைப்பினர் சுற்றுச்சூழல் காக்க மாசு இல்லாத தீபாவளி விழிப்புணர்வு நாடகம் வீடியோ காண லிங்கை பயன்படுத்தவும். https://youtu.be/4OqvBArCVwA
      


 

Latest News

சுயதொழில் தொடங்க ஜனவரி 29 ல்..

கரோனா வைரஸ் பாதிப்பு உதவி பெற..

திருச்சியில் பிப்ரவரி 2 ல்..

என்எம்சி கல்லூரியில்..

More >>

Events Near You

இலவச - Manapparai

45 வது - Musiri

மாவட்ட - Trichy

ஆண்டு - Srirangam

விண்வெளி - Thuraiyur

71 வது - Trichy

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>