போலீஸ் எஸ்பி செந்தில்குமார் எழுதிய பெரிதினும் பெரிது கேள் நூல் வெளியீட்டு விழா

......................................................

Posted on :13 January ,2020 00:31:36
News Image

போலீஸ் எஸ்பி செந்தில்குமார் எழுதிய பெரிதினும் பெரிது கேள் நூல் வெளியீட்டு விழா 

சென்னை புத்தக கண்காட்சியில் வரும் 19 ம் தேதி திருச்சி ரயில்வே போலீஸ் எஸ்பி செந்தில்குமார் எழுதிய, விகடன் பிரசுரம் வெளியிடும் பெரிதினும் பெரிது கேள் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: 

வாழ்க்கையும் வாசிப்பும் தந்த  அனுபவங்களை, தோல்வியிலிருந்து மீண்டு வந்த கதையை விளக்கும் விதமாக நான் எழுதியுள்ள முதல் நூல்..பெரிதினும் பெரிது கேள்!

விகடன் பதிப்பகத்தார் மூலமாக, 19.1.2020 அன்று சென்னை புத்தக கண்காட்சியில் வெளியாகிறது. இளைஞர்கள், மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும், வாழ்வில் ஒரு நோக்கத்  தெளிவை  உண்டாக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளேன்.

புத்தகங்கள் எனக்கு தந்த மேலான வெற்றி, வரலாற்றை வாசிப்பதன் அவசியம், சுதந்திரம் பெற்ற நெகிழ்வான தருணம், தமிழ் இலக்கிய மேன்மை, ராஜராஜ சோழன்  சிலையை மீட்ட வரலாறு, அறிவியல் தொழில் நுட்பத்தின் தேவை, திருக்குறள், திருவாசகம், குமரகுருபரர், பாரதியாரின் சிறப்பு , காலம்தோறும் காவல்துறையின் சேவை, கீழடி அகழ்வாய்வின் முக்கியத்துவம் போன்ற நம்முடைய சமகால நிகழ்வுகள் குறித்த புரிதல் என சகலத்தையும் விளக்கியுள்ளேன்.

போட்டித் தேர்வு எழுதுபவர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் வாசிக்கும் ஆர்வமுடைய அனைவருக்கும் மிகுந்த பயனுள்ள படைப்பாக இருக்கும். 18 ஆம் தேதியே விகடன் அரங்கு F 41,48 இல் விற்பனைக்கு கிடைக்கும்.

அவசியம் வாங்கிப் படித்துவிட்டு தங்களுடைய கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Latest News

சுயதொழில் தொடங்க ஜனவரி 29 ல்..

கரோனா வைரஸ் பாதிப்பு உதவி பெற..

திருச்சியில் பிப்ரவரி 2 ல்..

என்எம்சி கல்லூரியில்..

More >>

Events Near You

இலவச - Manapparai

45 வது - Musiri

மாவட்ட - Trichy

ஆண்டு - Srirangam

விண்வெளி - Thuraiyur

71 வது - Trichy

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>