என்எம்சி கல்லூரி இரண்டு நாள் பொங்கல் விழாவில் என்ன நடந்தது தெரியுமா?

......................................................

Posted on :12 January ,2020 17:03:02
News Image

என்எம்சி கல்லூரி இரண்டு நாள் பொங்கல் விழாவில் என்ன நடந்தது தெரியுமா?

திருச்சி, புத்தனாம்பட்டியில் உள்ள நேரு நினைவுக் கல்லூரி(என்எம்சி) பொன்விழா ஆண்டை கடந்த ஆண்டில் கொண்டாடியது. அது முதல் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்கள், சுயநிதிப்பிரிவு கல்லூரி மாணவர்கள், பிஎட் கல்லூரி மாணவர்கள் தனித்தனியாக கொண்டாடி மகிழ்ந்தனர். இது தவிர கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகள் தனியாக பண்டிகை கொண்டாடுவது உண்டு. இவ்வாண்டிலும் மாணவ மாணவிகள் ஏற்பாட்டில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். 

தமிழர்களின் பாரம்பரியத்தை  பறைசாற்றும் வகையில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், மண் பானையில் பொங்கலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பொங்கல் விழாவில், பாரம்பரிய உடையணிந்து, மாணவ, மாணவிகள் பங்கேற்றது கல்லூரி வளாகத்தை திறந்த வெளி கிராமமாக அழகாக்கியது.                          விழாவில் புலி ஆட்டம், மாடு ஆட்டம், சிலம்பாட்டம் போன்ற தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உறியடித்தல், கயிறு இழுத்தல், கோலப் போட்டி, இசை நாற்காலி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவ, மாணவிகளின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் விழாவில் இடம்பெற்றது பார்வையாளர்களைக் கவர்ந்தது.

முதல் நாளில் சுயநிதி பிரிவு சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற சிறப்புவிருத்தினர்  அரியலூர் அரசு கலை கல்லுரி  முனைவர் தமிழ்மாறன் பேசுகையில், இந்தியா, சீனா, ஜப்பான் நாடுகளை பார்த்து உலகம் அஞ்சுவதாக ஒபாமா அமெரிக்க நாடாளுமன்றத்தில்  உரையாற்றியதை நினைவு கூர்ந்தார். உலகிலே தமிழகம்  ஒழுக்கம் மற்றும் வீரத்தில் தலை சிறந்து விளக்குவதற்கு ஜல்லிக்கட்டு ஒரு சிறந்த உதாரணம் என்றும் பேசினார்.

இரண்டாவது நாளில் அரசு உதவி பெறும் பிரிவு சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் திரைப்பட நகைச்சுவை நடிகர்கள் கிங்காங், பென்ஜமின் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர். 

கல்லூரியின் தலைவர் பொன் பாலசுப்ரமணியன், செயலாளர் பொன் ரவிச்சந்திரன், முதல்வர் பெரியசாமி, துணை முதல்வர் குமாரராமன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பொங்கல் விழா கொண்டாட்டத்தின் வீடியோவை காண கீழே உள்ள இரண்டு லிங்கை பயன்படுத்தவும்.    https://youtu.be/l3o1rOBppmA https://youtu.be/grtMfQu7_AI

தகவல்: ரமேஷ், நேரு நினைவுக் கல்லூரி, புத்தனாம்பட்டி.

Latest News

மழை நீர் சேமிப்பு..

திருச்சி கடைவீதியில் ஆட்டோ,..

ஜெ.அன்பழகன் மறைவு திமுக..

துறையூர் கோட்ட மின்வாரிய..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>