திருச்சியில் 11 வயது 6 ம் வகுப்பு மாணவர் எழுதிய அறிவியல் நூல் வெளியீட்டு விழா

......................................................

Posted on :12 January ,2020 00:44:32
News Image

திருச்சியில் 11 வயது 6 ம் வகுப்பு மாணவர் எழுதிய அறிவியல் நூல் வெளியீட்டு விழா 

திருச்சியை சேர்ந்த 11 வயது ஆறாம் வகுப்பு மாணவர் திமோத்தி பால்(Timothy Paul's) எழுதிய 'ஒரு முன் இளம்பருவத்தினனின் அறிவியல் தொழில்நுட்ப உரைகள்' (A Preteen Speaks on Science and Technology) என்ற நூல் வெளியீட்டு விழா 13.1.2020 மாலை 6 மணிக்கு திருச்சி எஸ்ஆர்எம் ஹோட்டலில் நடைபெறுகிறது.                                நூலை திருச்சி ஐஐஎம் இயக்குனர் பீமரயா மேட்ரி வெளியிடுகிறார். திமோத்தி பால் கல்வி சார்ந்த தகவல்களை யூடியூப் வழியாக பார்க்கத் தொடங்கி 8 வயதில் ஃபிரென்ட்ரன் என்ற பெயரில் தனியாக சேனல் தொடங்கினார். சேனலில் வெளியிட தேவையான தகவல்கள், வீடியோவை சுயமாக கற்றுத் தேர்ந்து தனது பன்முக ஆற்றலை வளர்த்துக் கொண்டார். தனது மாமா வழிகாட்டுதலில் தனது வீடியோவை கட்டுரையாக எழுதி தொகுத்து தற்போது நூலாக வெளியீட்டு விழா நடைபெறுகிறது. திமோத்தி பால் அப்பா திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை பேராசிரியர் ஐசக் செபஸ்டியன் வரவேற்புரையாற்ற, தாய் லிடியா அருள்செல்வி நன்றி சொல்கிறார். 


Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>