மாநில அளவிலான அறிவியல், கணித, சுற்றுச்சூழல் மூன்று நாள் கண்காட்சி கரூரில் அக்டோபர் 31 ம் தேதி தொடக்கம்

......................................................

Posted on :29 October ,2019 16:10:32
News Image

மாநில அளவிலான அறிவியல், கணித, சுற்றுச்சூழல் மூன்று நாள்  கண்காட்சி கரூரில் அக்டோபர் 31 ம் தேதி தொடக்கம் 

மாநில அளவிலான 47 வது ஜவஹர்லால் நேரு அறிவியல், கணித, சுற்றுச்சூழல் மூன்று நாள் கண்காட்சி, கணித கருத்தரங்கு தொடக்க விழா ஆகியவை கரூர், வெண்ணைமலை, சேரன் தனியார் மேல்நிலைப்பள்ளியில் அக்டோபர் 31 ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

தொடக்க விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், இயக்குனர் கண்ணப்பன், மாவட்ட கலெக்டர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். 

கண்காட்சியில் நவம்பர் 1 ம் தேதி அறிவியல் படைப்புகளை பார்வையிடவும், விளக்கமளிக்கவும் உள்ளனர். நவம்பர் 2 ம் தேதி நிறைவு விழாவில் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இருந்து  182 அறிவியல் படைப்புகள், 320 மாணவர்கள், ஆசிரியர்கள் வருகை தர உள்ளனர்.

சென்னை கோட்டூர்புரம் கோளரங்கத்தில்( planatorium) இருந்து நடமாடும் அறிவியல் பேருந்து, வானியல் நிகழ்வு நடைபெறுகின்றது. பெங்களூர் தேசிய கல்வி ஆராய்ச்சி மையத்தில் இருந்து தொலைநோக்கி மூலம் வான் ஆராய்ச்சி நிகழ்வு நடைபெற இருக்கின்றது.

மதியம் மரம் பொன்னம்பலத்தின் மறந்து போன பாரம்பரிய மரங்கள் நிகழ்வு நடைபெறும். கரூர் மாநில அறிவியல் கண்காட்சி பற்றிய கூடுதல் செய்தி. கோடை பண்பலை வானொலி நிலையத்திலிருந்து வரும் வெள்ளி அன்று சேரன் பள்ளியில் நேரடி ஒளிபரப்பு காலை 11.00 மணிக்கு உலா வரும் நிகழ்ச்சியில் மாணவர்களின் அறிவியல் தொடர்பான பேட்டி, மாதிரிகளின் செயல் முறை, அடிப்படை அறிவியல் தத்துவம் பற்றிய நேரடி நிகழ்வு நடைபெறுகின்றது.

கண்காட்சிக்கு அழைத்துச்சென்று காட்டி நம் குழந்தைகளுக்கு அடிப்படை அறிவியல் (basic science) தத்துவத்தை நேரடி காட்சி மூலம் சொல்லி கொடுப்போம். அது பின்னாளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உதவும்.


Latest News

சுயதொழில் தொடங்க ஜனவரி 29 ல்..

கரோனா வைரஸ் பாதிப்பு உதவி பெற..

திருச்சியில் பிப்ரவரி 2 ல்..

என்எம்சி கல்லூரியில்..

More >>

Events Near You

இலவச - Manapparai

45 வது - Musiri

மாவட்ட - Trichy

ஆண்டு - Srirangam

விண்வெளி - Thuraiyur

71 வது - Trichy

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>