ஆழ்குழாய் குழியில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரம் விரைந்து மீட்க மக்கள் பிரார்த்தனை

......................................................

Posted on :25 October ,2019 21:39:20
News Image

ஆழ்குழாய் குழியில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரம்   விரைந்து மீட்க மக்கள் பிரார்த்தனை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கிராமத்தில் வீட்டு தோட்டத்தில் ஆழ்குழாய் குழியில் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, காவல் துறை இணைந்து தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்த மக்கள் குழந்தையை நலமாக விரைந்து மீட்க பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த விவசாயி பிரிட்டோ ஆரோக்கியராஜ். நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் தண்ணீர் தேவைக்கு ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ளார். அதில் தண்ணீர் வராமல் மூடியுள்ளார். 

இந்நிலையில் வீட்டுக்கு அருகே உள்ள தோட்டத்தில் சோளம் பயிர் செய்து உள்ள வயலில் மாலையில் பிரிட்டோவின் இரண்டு வயது குழந்தை சுஜித் விளையாடும் போது தவறி ஆழ்குழாய் குழியில் விழுந்து விட்டான். 

இதை அறிந்து பெற்றோர், ஊர் மக்கள் தவித்தனர். தகவலறிந்த காவல் துறை, தீயணைப்பு துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை அலுவலர்கள் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளை துவங்கினர். 

குழந்தை சுஜித் ஆரோக்கியமாக இருப்பதும், குழியில் 35 அடி ஆழத்தில் இருப்பதும் தெரிய வந்து முதல் கட்டமாக ஆக்சிஜன் செலுத்த நடவடிக்கை எடுத்தனர். ஆழ்குழாய் குழி அருகில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் வெட்டி குழந்தையை நலமாக மீட்க நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது. 

இது குறித்து அறிந்த அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் சிவராசு, போலீஸ் எஸ்பி ஜியாவுல்ஹக் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தீவிரப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

குழந்தை சுஜித் நலமாக விரைந்து மீட்க வேண்டும் என மக்கள் சமூக வலைதளத்தில் மட்டுமல்லாமல் மனதிலும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

Latest News

சுயதொழில் தொடங்க ஜனவரி 29 ல்..

கரோனா வைரஸ் பாதிப்பு உதவி பெற..

திருச்சியில் பிப்ரவரி 2 ல்..

என்எம்சி கல்லூரியில்..

More >>

Events Near You

இலவச - Manapparai

45 வது - Musiri

மாவட்ட - Trichy

ஆண்டு - Srirangam

விண்வெளி - Thuraiyur

71 வது - Trichy

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>