பசுமை பட்டாசுகளுடன் பண்டிகையை கொண்டாட திருச்சி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

......................................................

Posted on :25 October ,2019 20:19:55
News Image

பசுமை பட்டாசுகளுடன் பண்டிகையை கொண்டாட திருச்சி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

பண்டிகை நாளில் பசுமை பட்டாசுகளை பயன்படுத்த திருச்சி எலைட் சிறப்பு பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 பள்ளி தாளாளர் முத்துலட்சுமி தலைமை வகித்துப் பேசுகையில், மத்திய அரசின் கீழ் இயங்கும் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (CSIR) அங்கமான தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (NEERI) வெடித்த பின் தண்ணீர் மூலங்களாக மாறும் பட்டாசுகள் கந்தக மற்றும் நைட்ரஜன் வாயுக்கள் குறைவான பட்டாசுகள் மற்றும்   குறைவான நச்சு வாயுக்களை வெளியேற்றும் வாசனை பட்டாசுகள் உள்ளிட்ட நான்கு வகைகளை அறிமுகப்படுத்தியது. தற்போது அனைத்து பட்டாசு நிறுவனங்களும் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்துள்ளது. நாம் ஒவ்வொருவரும்  பசுமை பட்டாசுகளை பயன்படுத்துவதால் 25 முதல் 35 சதவீதம் நச்சு மூலகங்கள், ஒலி மாசு, காற்று மாசுக்களை தவிர்க்கலாம். எனவே அனைவரும் பசுமை பட்டாசுகளையே பயன்படுத்த வேண்டும் என்றார். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் மற்றும் ஆசிரியர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

Latest News

சுயதொழில் தொடங்க ஜனவரி 29 ல்..

கரோனா வைரஸ் பாதிப்பு உதவி பெற..

திருச்சியில் பிப்ரவரி 2 ல்..

என்எம்சி கல்லூரியில்..

More >>

Events Near You

இலவச - Manapparai

45 வது - Musiri

மாவட்ட - Trichy

ஆண்டு - Srirangam

விண்வெளி - Thuraiyur

71 வது - Trichy

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>