மாசில்லா தீபாவளி கொண்டாட திருச்சியில் தண்ணீர் அமைப்பு விழிப்புணர்வு வீதி நாடகம்

......................................................

Posted on :25 October ,2019 18:41:30
News Image

மாசில்லா தீபாவளி கொண்டாட திருச்சியில் தண்ணீர் அமைப்பு விழிப்புணர்வு வீதி நாடகம்

திருச்சி தண்ணீர் அமைப்பின் சார்பில் 'மாசில்லா தீபாவளி, மரக்கன்றுகளுடன் தீபாவளி' விழிப்புணர்வு வீதி நாடகம் மற்றும் சிறப்பு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி  எடமலைப்பட்டி புதூர் மாநகராட்சி அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மக்கள் சக்தி இயக்கம் மாநில ஆலோசகரும்,  தண்ணீர் அமைப்பின் செயலாளமான நீலமேகம் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் பேராசிரியர் சதீஷ்குமார் தலைமையில் விழிப்புணர்வு வீதி நாடகம்  வெடிகளைத் தவிர்ப்போம்,  செடிகளை வளர்ப்போம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நாடகத்தில் நச்சு வெடிகள் தவிர்த்து, நல்ல மரக்கன்றுகளை நட்டு வளர்ப்போம்  என்றும், வெடிகளால் ஏற்படும் விபத்துகள், ஆபத்துகள், குழந்தைகள் தொடங்கி முதியோர் வரை, அனைத்து உயிர்களுக்கும் வெடிகள் ஏற்படுத்தும் இன்னல்கள்,நோய்கள், குறித்து நாடகம் நடத்தப்பட்டது. வெடிச்சத்தம், வெடிப்புகையால் ஏற்படும் வளிமண்டல நச்சு மிகு கரும்புகை மாசு , பறவைகள்,  விலங்குகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு வெடியால் ஏற்படும் தீங்குகள் குறித்து நாடகம் அரங்கேறியது. 

இந்நாடகத்தில் கலைக்காவிரி தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற மாணவர்கள்  இனியவன், திரிபுரசுந்தரி, ஆகாஷ், நிக்கோலஸ், மதன், கிரிஜா, கீர்த்தனா, முத்துலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் சிறப்பு புத்தாடை வழங்கப்பட்டது. நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயந்தி, உதவி ஆசிரியர் புஷ்பலதா உள்ளிட்ட ஆசிரியர்கள்,  மாணவர்கள் பங்கேற்றனர். 

நிறைவாக வெடிகளைத் தவிர்ப்போம் செடிகளை வளர்ப்போம் என உறுதி மொழி ஏற்று பசுமை தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்த செய்தியின் வீதி நாடக வீடியோவை காண இந்த லிங்கை பயன்படுத்தவும். https://youtu.be/4OqvBArCVwA


Latest News

சுயதொழில் தொடங்க ஜனவரி 29 ல்..

கரோனா வைரஸ் பாதிப்பு உதவி பெற..

திருச்சியில் பிப்ரவரி 2 ல்..

என்எம்சி கல்லூரியில்..

More >>

Events Near You

இலவச - Manapparai

45 வது - Musiri

மாவட்ட - Trichy

ஆண்டு - Srirangam

விண்வெளி - Thuraiyur

71 வது - Trichy

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>