உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடு தடுப்பு தினம்

......................................................

Posted on :21 October ,2019 18:43:08
News Image

உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடு தடுப்பு தினம்

உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடு தடுப்பு தினம் திருச்சி எலைட் சிறப்பு பள்ளியில் கடைப்பிடிக்கப்பட்டது.  பள்ளி தாளாளர் முத்துலட்சுமி பள்ளி மாணவர்களிடையே பேசுகையில், உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. அயோடின் சத்து பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்நாளில் நோக்கமாகும். அயோடின் சத்து குறைபாட்டால் இளம் வயதினரின் அறிவுத் திறன் பாதிக்கப்படும். பெரியவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்படும். எனவே தினமும் அயோடின் கலந்த உப்பினை பயன்படுத்த வேண்டும். உலக பொது சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வின்படி அயோடின் சத்து குறைபாடு உள்ள நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. அயோடின் சத்து மனித வளர்ச்சிக்கு தேவையான மைக்ரோ ஊட்டச்சத்தாகும். நம் உடலில் கழுத்தின் முன்பகுதியில் தைராய்டு சுரப்பி உள்ளது. இந்த சுரப்பியானது இரத்தத்தில் உள்ள அயோடினையும் சில புரத பொருட்களையும் இணைத்துக்கொண்டு தைராக்ஸின் மற்றும் ட்ரை அயோடோ தைரோனின் எனும் ஹார்மோனையும் சுரக்கிறது. அயோடின் நுண் சத்தானது ரத்தத்தில் குறைந்தால் இரண்டு ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்படும். எனவே  அயோடின் சத்து உள்ள உப்பினை பயன்படுத்த வேண்டும்  என்றார். இயற்கை நல வாழ்வியல் ஆலோசகரும், யோகா ஆசிரியருமான விஜயகுமார், பள்ளி ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

Latest News

சுயதொழில் தொடங்க ஜனவரி 29 ல்..

கரோனா வைரஸ் பாதிப்பு உதவி பெற..

திருச்சியில் பிப்ரவரி 2 ல்..

என்எம்சி கல்லூரியில்..

More >>

Events Near You

இலவச - Manapparai

45 வது - Musiri

மாவட்ட - Trichy

ஆண்டு - Srirangam

விண்வெளி - Thuraiyur

71 வது - Trichy

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>