வெளிநாட்டு வேலைக்கு போகனுமா?ஏமாறாமல் இருக்க திருச்சி கலெக்டர் அறிவுறுத்தல்

......................................................

Posted on :21 October ,2019 08:13:58
News Image

வெளிநாட்டு வேலைக்கு போகனுமா?ஏமாறாமல் இருக்க திருச்சி கலெக்டர் அறிவுறுத்தல் 

வெளிநாட்டு வேலைக்கு போகனுமா? மக்கள் ஏமாறாமல் இருக்க திருச்சி கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலை தெரிந்து கொள்ள வேண்டும். 

இது குறித்து திருச்சி கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள அறிவிப்பு : தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டு வேலைக்கு பணிபுரிய செல்ல விரும்புவோர் சட்டப்படியான ஆவணங்கள் மற்றும் வேலைக்கான விசாவுடன் அரசு பதிவு பெற்ற முகவர்கள் மூலம் செல்ல வேண்டும். வெளிநாடு செல்லும் முன்பு அந்நாட்டின் சட்டம் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். வேலைக்குச் செல்லும் நிறுவனம், பணிகள், வேறு நிறுவனத்திற்கு பணி வாய்ப்பு இருந்தால் அதற்கான வரையறைகள் அறிந்து கொள்ள வேண்டும். 

வேலைக்குச் செல்லும் நபரின் பணியின் சூழல், பொறுப்பு, உரிமை, ஊதியம் ஆகிய தகவல்களை கொண்டுள்ள கான்ட்ராக்ட் நகலை எப்போதும் தன்னிடம் வைத்து இருக்க வேண்டும். 

பணியை செய்யும் வெளிநாட்டில் உள்ள இந்தியத் தூதரங்களின் முகவரி, தொலைபேசி எண்களை வைத்து இருக்க வேண்டும். வெளிநாட்டில் பணிபுரியும் இடத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் இந்திய தூதரகத்தை நேரடியாக அணுக வேண்டும். வெளிநாட்டில் பணிபுரியும் இடத்தில் இருந்து தமிழ்நாடு வருவதற்கு வெளி செல் விசா பெற வேண்டும். 

தங்கள் குடும்ப உறுப்பினர் யாரும் வெளிநாட்டு வேலைக்கு செல்லும் போது அவர் சம்மந்தப்பட்ட பாஸ்போர்ட், வேலை ஒப்பந்தம் உள்பட அனைத்து ஆவணங்கள் நகலை குடும்பத்தினர் கைவசம் வைத்துக் கொள்ள வேண்டும். 

மேலும் விபரங்கள்  www.emigrate.gov.in மற்றும் https://portal2.madad.gov.in ஆகிய வெப்சைட்டில் பார்த்து அறியலாம். 

இவ்வாறு திருச்சி கலெக்டர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest News

சுயதொழில் தொடங்க ஜனவரி 29 ல்..

கரோனா வைரஸ் பாதிப்பு உதவி பெற..

திருச்சியில் பிப்ரவரி 2 ல்..

என்எம்சி கல்லூரியில்..

More >>

Events Near You

இலவச - Manapparai

45 வது - Musiri

மாவட்ட - Trichy

ஆண்டு - Srirangam

விண்வெளி - Thuraiyur

71 வது - Trichy

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>