பெருமாள் கோயில் பிரசாதமான துளசி செடியில் இத்தனை நன்மைகள் இருக்கா? திருச்சி துவக்கப்பள்ளியில் துளசி செடி வழங்கும் விழாவில் பார்வையாளர்கள் வி

......................................................

Posted on :19 October ,2019 22:20:24
News Image

பெருமாள் கோயில் பிரசாதமான துளசி செடியில் இத்தனை நன்மைகள் இருக்கா?                 திருச்சி துவக்கப்பள்ளியில் துளசி செடி வழங்கும் விழாவில் பார்வையாளர்கள் வியப்பு 

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த துளசி செடி வழங்கும் விழாவில், பெருமாள் கோயில் பிரசாதமான துளசி செடியில் இத்தனை நன்மைகள் இருக்கா? என பார்வையாளர்கள் வியந்தனர். 

ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி மெட்ரோபாலிட்டன், அப்துல் கலாம் பசுமை இந்தியா நம்பகம் இணைந்து அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு துளசிச்செடி வழங்கும் விழாவை நடத்தின.

 விழாவில், ஓசோன் படலத்தைப் பாதுகாக்க வீடுகள் தோறும் துளசிச் செடியை வளர்க்கலாம். அரச மரம், மூங்கில், துளசி இவை மூன்றும் காற்று மண்டலத்தில் உள்ள கரியமில வாயுவை உள்வாங்கிக் கொண்டு 24 மணி நேரமும் ஆக்சிஜனை வெளியிடுபவை ஆகும்.

இதில் அரச மரம், மூங்கில் ஆகியவற்றை வளர்க்க பெரிய அளவிலான இடமும், அதிக ஆண்டுகள் காத்திருக்கவும் வேண்டும். ஆனால், துளசியை வளர்க்க சிறிய தொட்டி போதுமானது. விதை போட்டாலும், கன்றாக வைத்தாலும் 2 முதல் 4 மாதங்களில் முழுமையான ஆக்சிஜனை தரவல்லது துளசிச் செடி. துளசிச் செடி 20 மணி நேரம் ஆக்சிஜனையும் 4 மணி நேரம் ஓசோனையும் வெளியிடுகிறது. ஒரு துளசிச் செடி அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஓசோனை வெளியிடுகிறது.

துளசி இலைகளை பச்சையாக மென்று தின்பதால் சளி நீங்கும். பனிக்காலத்தில் பனங்கற்கண்டு இட்ட சூடான துளசி தேநீர் அருந்தினால், உடல் நலம் தரும். தாகம், சுரம், வயிறு உளைச்சல், மாந்தம் இவையெல்லாம் தூய துளசியினால் குறையும்.

தினமும் நான்கு துளசி இலை சாப்பிட்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். வீட்டைச் சுற்றி துளசிச் செடி வளர்த்தால் கொசுக்கள் வராது.

சரும நோய்களுக்கு துளசி சிறந்த நிவாரணி ஆகும். அனைத்து தாவரங்களுமே பகலில் கார்பன் டை ஆக்ஸைடு எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன. இரவில் ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடுகின்றன. ஆனால், துளசி மாத்திரம் பகல், இரவு எந்நேரமும் ஆக்சிஜனை வெளியிடும் திறன் படைத்தது. இதனால், தூய காற்றை சுவாசித்து நாம் ஆரோக்கியமாக வாழலாம். இதனால் ஒவ்வொருவர் வீட்டிலும் துளசி செடி வளர்க்க வேண்டும் என விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. அப்போது பெருமாள் கோயில்்பிரசாதமான துளசி செடியில்் இத்தனை நன்மைகள் இருக்கா? என பார்வையாளர்கள் வியந்தனர். 

விழாவுக்கு ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி மெட்ரோபாலிட்டன் செயலாளர் ஆடிட்டர் ராய் ஜான் தாமஸ் தலைமை வகித்தார். மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் முன்னிலை வகித்தார். திருச்சிராப்பள்ளி வருமான வரித்துறை துணை ஆணையர் ஸ்ரீதர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்துல் கலாம் பசுமை இந்தியா நம்பக நிர்வாக அறங்காவலர் முத்துச்செல்வி நோக்க உரையாற்றினார். ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி மெட்ரோபாலிடன் தலைவர் அருமை ராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் , பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மணிவண்ணன், லில்லி ஜெயராணி, முகமது அலி ஜின்னா, இயற்கை நலவாழ்வியல் ஆலோசகரும், யோகா ஆசிரியருமான விஜயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி வரவேற்றார். பசுமை இந்தியா அறங்காவலர் ஜெயந்தி விழா ஒருங்கிணைப்பு செய்திருந்தார். இடைநிலை ஆசிரியர் புஷ்பலதா நன்றி கூறினார். 

Latest News

சுயதொழில் தொடங்க ஜனவரி 29 ல்..

கரோனா வைரஸ் பாதிப்பு உதவி பெற..

திருச்சியில் பிப்ரவரி 2 ல்..

என்எம்சி கல்லூரியில்..

More >>

Events Near You

இலவச - Manapparai

45 வது - Musiri

மாவட்ட - Trichy

ஆண்டு - Srirangam

விண்வெளி - Thuraiyur

71 வது - Trichy

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>