திருச்சி ஊனமுற்றோர் சங்க கூட்டத்தில் ஊனமுற்றோர் கழிவறை அமைக்க வலியுறுத்தல்

......................................................

Posted on :19 October ,2019 16:48:08
News Image

திருச்சி ஊனமுற்றோர் சங்க கூட்டத்தில் அரசு, தனியார், பொழுதுபோக்கு கட்டிடங்களில் ஊனமுற்றோர் கழிவறை அமைக்க வலியுறுத்தல் 

திருச்சி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்க கூட்டத்தில் அரசு, தனியார், பொழுதுபோக்கு கட்டிடங்களில் ஊனமுற்றோர் கழிவறை அமைக்க வலியுறுத்தி இயற்கை சமூக நலவாழ்வு மைய தலைவர், யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசினார். 

திருச்சி மாவட்ட உடல் ஊனமுற்றோர் முன்னேற்ற சங்க கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. சங்க செயலர் மாரிகண்ணன் தலைமை வகித்தார். இயற்கை சமூக நலவாழ்வு மையம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர், யோகா ஆசிரியர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், உடல் ஊனமுற்றோருக்கு அரசு வழங்க வேண்டிய, வழங்கிக் கொண்டிருக்க கூடிய அனைத்து திட்டங்களையும் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உடல் ஊனமுற்றோர் அவர்களது தனித்திறமையை கண்டறிந்து இருக்கவேண்டும். அதனை அடிப்படையாக கொண்டு முயற்சி செய்து அதில் வெற்றி பெறவேண்டும். மேலும், திருவிழா பண்டிகை நாட்களில்  தேவைப்படும் பொருட்களை தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்ளலாம். அதற்கு ஒவ்வொருவரும் உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருக்கவேண்டும் என்றார். மேலும், உடல் ஊனமுற்றோர் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள், பொழுதுபோக்கு நிறுவனங்கள் செல்வதற்கு உகந்த வகையில் அனைத்து கட்டிட வளாகங்களிலும் சாய்வுப் பாதை மற்றும் ஊனமுற்றோருக்கு தகுந்த கழிவறை அமைக்க வேண்டும் என பேசினார். மகளிர் அணி தலைவி அன்னக்கிளி, செயற்குழு உறுப்பினர்கள் ராஜா, சிவராமகிருஷ்ணன், மாரிமுத்து உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். முன்னதாக துணைச் செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.   பொருளாளர் மனவாளன் நன்றி கூறினார்.

Latest News

மற்றவர்களுக்கு சுதாங்கன்....

கண்கள் தானம் அளித்து உறுதி..

துறையூரில் நாளை செப்.5 ..

முன்னாள் ஜனாதிபதி பிரணாப்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>