பச்சப்பெருமாள்பட்டியில் பாரம்பரிய கலைகள் மூன்று நாள் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

......................................................

Posted on :05 October ,2019 01:43:23
News Image

பச்சப்பெருமாள்பட்டியில் பாரம்பரிய கலைகள் மூன்று நாள் பயிற்சி முகாம் இன்று தொடக்கம் 

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பச்சப்பெருமாள்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இந்திய தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு கழகம், கிராம கல்விக்குழு இணைந்து அக்டோபர் 5, 6, 7 ஆகிய மூன்று நாள் பயிற்சி முகாம் நடத்துகின்றன. இப்பயிற்சி முகாமில் கம்பு, வாள், சுருள் வாள்,  வேல் கம்பு, மான் கொம்பு வீச்சு, குத்து வரிசை, பிடி வரிசை, கம்பு அடி பாடம், போர் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு கற்பித்து தரப்பட உள்ளது. முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் மனோகரன், முன்னாள் ஊராட்சி தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகிக்கின்றனர். உப்பிலியபுரம் வட்டார கல்வி அலுவலர் ஆனந்தராஜ் டேவிட்வின்பிரட், விஏஒ ரவிச்சந்திரன், கிராம கல்விக்குழு தலைவர் ராசு, தலைமையாசிரியர் அருமைநாயகம் முன்னிலை வகிக்கின்றனர். விளையாட்டு கழக பொதுச்செயலாளர், சிலம்பாட்ட உலக சாம்பியன் வேங்கைநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். முகாம் ஒருங்கிணைப்பாளராக உடற்கல்வி ஆசிரியர் வேதநாயகி, இணை அமைப்பாளர்களாக ஆசிரியர்கள் தர்மபிரபு, கண்ணதாசன், சத்தியசீலன், மகாலிங்கம், செல்லத்துரை, பழனிச்சாமி ஆகியோர் உள்ளனர். விளையாட்டு கழக திருச்சி மாவட்ட தலைவர் கனகராஜ், செயலாளர் பெரியசாமி, பொருளாளர் முத்துசெல்வம் முகாம் ஏற்பாடு செய்துள்ளனர். இப்பயிற்சி முகாமில் பங்கேற்போர் கோவையில் நடைபெறும் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்புள்ளது. விபரங்கள் அறிய 9962633282, 9843537554 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

Latest News

சுயதொழில் தொடங்க ஜனவரி 29 ல்..

கரோனா வைரஸ் பாதிப்பு உதவி பெற..

திருச்சியில் பிப்ரவரி 2 ல்..

என்எம்சி கல்லூரியில்..

More >>

Events Near You

இலவச - Manapparai

45 வது - Musiri

மாவட்ட - Trichy

ஆண்டு - Srirangam

விண்வெளி - Thuraiyur

71 வது - Trichy

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>