திருச்சி மாவட்டத்தில் ஆதார் கார்டு திருத்தம் செய்ய மக்கள் அவதி

......................................................

Posted on :04 July ,2019 11:57:59
News Image

திருச்சி மாவட்டத்தில் ஆதார் கார்டு திருத்தம் செய்ய மக்கள் அவதி 

திருச்சி மாவட்டம் துறையூர் உள்பட அனைத்து ஆதார் அரசு இசேவை மையங்கள் சர்வர் பிரச்சனையால் செயல்படாமல் பூட்டிக்கிடக்கிறது. இதனால் ஆதார் திருத்தம் செய்ய மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 

ஆதார் கார்டை பான் கார்டு, வங்கி கணக்கு, அரசு மானியம் பெற இணைக்க வேண்டியது அவசியமாகும். ஆதார் கார்டில் பெயர் உள்ளிட்ட தகவலில் எழுத்து பிழை இருந்தாலும் இணைக்க இயலாது. இதனால் பயனாளிகள் பாதிக்கப்படுகின்றனர். ஆதார் கார்டு திருத்தம் செய்ய அரசு இசேவை மையத்திற்கு தான் செல்ல வேண்டும். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகா அலுவலகம், நகராட்சி அலுவலகம், தபால் அலுவலகம்,ஸ்டேட் பாங்க், கனரா பாங்க் ஆகிய இடங்களில் ஆதார் இசேவை மையம் உள்ளது. 

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா அலுவலகம், நகராட்சி, தபால் அலுவலகத்தில் கடந்த ஒரு மாதமாக சர்வர் பிரச்சனையால் ஆதார் இசேவை மையம் செயல்படாமல் பூட்டிக்கிடக்கிறது. ஸ்டேட் பாங்க், கனரா பாங்க்கில் தினமும் 20 பேருக்கு மட்டுமே திருத்தம் செய்யப்படுகிறது. இதற்கு டோக்கன் பெற அதிகாலை முதல் வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. ஆதார் கார்டு திருத்தம் செய்ய தினமும் அவதிப்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். திருச்சி மாவட்டத்தில்  அனைத்து தாலுகாவில் உள்ள அரசு ஆதார் இசேவை மையத்தில் சர்வர் பிரச்சனை உள்ளதாக பொறுப்பில் உள்ள பணியாளர்கள் தெரிவித்தனர். 

அத்தியாவசியமாகிவிட்ட ஆதார் கார்டு இசேவை மையங்கள் செயல்பட திருச்சி மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவதிப்படும் மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

இதன் வீடியோ காண லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.                                     https://youtu.be/GreGHUUSjxc


Latest News

ஜெ.அன்பழகன் மறைவு திமுக..

துறையூர் கோட்ட மின்வாரிய..

திருச்சி ஆவின் பொருட்கள்..

கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>