சர்வதேச இந்திய நாடகத்திருவிழாவுக்கு விண்ணப்ப பதிவு செய்ய அறிவிப்பு

......................................................

Posted on :10 June ,2019 09:32:21
News Image

சர்வதேச இந்திய நாடகத்திருவிழாவுக்கு விண்ணப்ப பதிவு செய்ய அறிவிப்பு 

மத்திய அரசின் கலாச்சாரத்துறையின் கீழ் புதுடில்லியில் செயல்பட்டு வரும் தேசிய நாடகப்பள்ளி சார்பில் சர்வதேச இந்திய நாடகத்திருவிழா(21 வது பாரத் ரங் மகோத்சவ் _ 2020) பிப்ரவரி 2020 ல் புதுடில்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்கான திட்ட வரைவுகளை அனுப்பி பதிவு செய்து கொள்ள தேசிய நாடகப்பள்ளி இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருவிழாவானது இந்தியா மற்றும் வெளிநாட்டு இயக்குனர்கள், நாடகக் குழுக்கள், நாடக நிலையங்கள் மூலமான முழுநேர பங்களிப்பாக இருக்கும். இதில் 31 ஆகஸ்ட் 2019 க்கு முன்பு பொதுமக்களுக்கு நடத்திக்காட்டும் சிறந்த தயாரிப்புகளை காட்சிப்படுத்தும். முந்தைய பாரத் ரங் மகோத்சவ் மற்றும் 8 வது நாடக ஒலிம்பிக்கில் ஏற்கனவே காட்சிப்படுத்தப்பட்ட நாடகங்கள் 21 வது பாரத் ரங் மகோத்சவ்வுக்கு பரிசீலிக்கப்படாது. 

விருப்பமுள்ள நாடக இயக்குனர், நாடகக் குழுக்கள் மற்றும் நாடக நிலையங்களில் இருந்து விண்ணப்ப பதிவு செய்து கொள்ளவும். விண்ணப்பம் செய்பவர்கள் பென் டிரைவில் தயாரிப்பை தெளிவாக பதிவு செய்து சேர்த்து வரையறைக்கப்பட்ட மாதிரியில், பிற விபரங்களுடன் தேசிய நாடகப்பள்ளி இணைய தளம் www.nsd.gov.in வாயிலாக விண்ணப்பம் செய்து கொள்ளவும். URL இணைப்பு https://brmapplication.nsd.gov.in வாயிலாகவும் விண்ணப்பம் செய்யலாம். ஒரு குழு/இயக்குனர் /நாடக நிலையத்தில் இருந்து ஒரு விண்ணப்ப பதிவு மட்டும் ஏற்கப்படும். தேர்வுக்குழு முடிவு இறுதியானது. இயக்குனர், தேசிய நாடகப்பள்ளி, பஹவால்பூர் இல்லம், பக்வான்தாஸ் சாலை, புதுடில்லி_ 110001 என்ற முகவரியில் விண்ணப்பம் பெறப்படும். விண்ணப்பம் செய்ய10,செப்டம்பர் 2019 கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி: 011 _ 23073647, 23388249, ஃபேக்ஸ்: 011 _ 23384288, இமெயில் : festivalcell@gmail.com, festivalcell@nsd.gov.in, இணையதளம்: www.nsd.gov.in வாயிலாக மேலும் விபரங்கள் அறிந்து கொள்ளலாம்.       இது போன்ற செய்திகள் அறிந்து கொள்ள www.livetrichy.com இணையதளத்தில் register செய்து login செய்யவும். 

Latest News

ஜெ.அன்பழகன் மறைவு திமுக..

துறையூர் கோட்ட மின்வாரிய..

திருச்சி ஆவின் பொருட்கள்..

கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள்..

More >>

Events Near You

இலவச - Musiri

விகாஸ் - Thuraiyur

அவேர்னெஸ் - Musiri

81 வது - Musiri

சற்குரு - Thuraiyur

சாய் - Musiri

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>