......................................................
உலகின் பெர்ரிய்ய... ரூபாய் நோட்டு பார்க்க ஆசையா? திருச்சியில் மூன்று நாள் பணத்தாள் கண்காட்சியில்...
திருச்சி உலகப் பணத்தாள்கள் கண்காட்சி வரும் 14, 15, 16 தேதிகளில் நடக்கிறது. இதில் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற உலகின் பெரிய ரூபாய் நோட்டு காட்சிப்படுத்தப்படும். கண்காட்சியை காண வரும் பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப் படுவார்கள்.
திருச்சி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலக பணத்தாள்கள் நாணயங்கள் கண்காட்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீனிவாசா ஹாலில் வரும் 14, 15 ,16 ஆகிய தேதியில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது.
கண்காட்சியில் உலகில் உள்ள 200 நாடுகளில் வெளியிட்ட பணத்தாள்கள் காட்சிப்படுத்தப்பட்டு அந்நாட்டின் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, பொருளாதாரம் எடுத்துரைக்கப் படுகிறது. மலேசியா தனது 60வது சுதந்திரதின விழாவில் 600 ரிங்கிட் மதிப்புள்ள 22 x 37 செமீ அளவில் மிகப் பெரிய பணத்தாளினை வெளியிட்டது. இப் பணத்தாள் உலகின் மிகப்பெரிய பணத்தாளாக அறியப்பட்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
கின்னஸ் உலக சாதனைப் படி, மிகப்பெரிய சட்டபூர்வமான வங்கிக் பணத்தாள் 2017 டிசம்பர் 29 அன்று நெகாரா மலேசியா வங்கியால் வெளியிடப்பட்டதாகும். 814 செமீ² (126.17 அங்குலம்) ஒரு A4 காகித அளவைவிட பெரியது. 600 மலேசிய ரிங்கிட் மதிப்புடையதாக பதிவு செய்துள்ளது.
மலேசியாவின் அகோங்ஸ் மாநிலத் தலைவர்களின் படங்களுடன் 1957 ல் மலாயா மற்றும் பிரிட்டிஷ் ஆணையர் பல்வேறு சுல்தான்கள் சுதந்திர போராட்ட உடன்படிக்கை கையெழுத்திடும் படங்கள் பணத்தாள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப் படுகின்றன என்று கண்காட்சி ஏற்பாடு குழுவினர் தெரிவித்தனர்.
Latest News
மாநில அளவிலான அறிவியல், கணித,..
தீபாவளி நினைவுகள் –..
ஆழ்குழாய் குழியில் விழுந்த..
பசுமை பட்டாசுகளுடன்..
Events Near You
- Trichy
- Trichy
Azadi Champions of - Trichy
College Festival / - Trichy
Aanmeegam
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...
திருச்சி குழந்தை உயிருக்காக...
Hospitals
Government Hospital - Srirangam - Srirangam
Rajeswari - Trichy