Ad Banner

14 வயதில் திறமையை கண்டறிந்து விளையாட்டுப் பயிற்சி தர வேண்டும் ஹாக்கி தங்கமகன் பாஸ்கரன் வலியுறுத்தல்

......................................................

Posted on :08 January ,2019 08:39:31
News Image

14 வயதில் திறமையை கண்டறிந்து விளையாட்டுப் பயிற்சி தர வேண்டும் ஹாக்கி தங்கமகன் பாஸ்கரன் வலியுறுத்தல் 

இந்திய ஹாக்கி அணி முன்னாள் கேப்டனும், 1980 ம் ஆண்டு ஹாக்கியில் தங்கப்பதக்கம் வென்ற வீரருமான பாஸ்கரன், 14 வயதில் திறமையை கண்டறிந்து விளையாட்டு பயிற்சி தர வேண்டும் என திருச்சியில் வலியுறுத்தி பேசினார். 

திருச்சி தேசியக் கல்லூரி உடற்கல்வியியல் துறை சார்பில் அனைவருக்கும் விளையாட்டு மற்றும் விளையாட்டில் மறுமலர்ச்சி என்ற தலைப்பில் 5 நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெறுகிறது. கல்லூரி செயலாளர் ரகுநாதன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சுந்தரராமன் வரவேற்றார். கருத்தரங்கு விழா மலரை கல்லூரி தலைவர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார். 

கருத்தரங்கை தொடங்கி வைத்து இந்திய ஹாக்கி அணி முன்னாள் கேப்டனும், 1980 ம் ஆண்டு ஹாக்கியில் தங்கப்பதக்கம் வென்ற வீரருமான பாஸ்கரன் பேசியதாவது : இந்தியாவில் விளையாட்டு முக்கியத்துவம் பெற்று வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. பள்ளியில் 14 வயதில் ஒருவரின் திறமையை கண்டறிந்து விளையாட்டு பயிற்சி தர வேண்டும். படிப்புக்கு நீட், ஜேஇஇ தேர்வுக்கு பயிற்சி பெறுவது போல விளையாட்டில் பயிற்சி வகுப்பு அதிகமாக வேண்டும். அப்போது விளையாட்டு துறை இன்னும் மேம்பாடு பெறும். இளம் வயது முதல் விளையாட்டு வீரருக்கு சர்வதேச பயிற்சி, சரிவிகித உணவு, வழிகாட்டுதல், தொடர் ஊக்குவிப்பு இருந்தால் எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கம் பெறும் நாடுகள் பட்டியலில் இடம் பெறும் என்று பேசினார். உடற்கல்வி இயக்குனர் பிரசன்ன பாலாஜி கருத்தரங்கு பற்றி பேசினார். 

Latest News

ஆடி 18 நாளை துறையூரில்..

துறையூரில் நாளை பகலில் ஏ/சி,..

திருச்சி மாவட்டத்தில் ஆதார்..

சர்வதேச இந்திய..

More >>

Events Near You

- Trichy

- Trichy

Azadi Champions of - Trichy

College Festival / - Trichy

More >>

Aanmeegam

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமிகள்...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்...

திருச்சி குழந்தை உயிருக்காக...

More >>

Hospitals

Government Hospital - Srirangam - Srirangam

Rajeswari - Trichy

More >>